அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கெக்கிராவ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் முன்புற கண்ணாடிகள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்தக நிலையங்கள் மீதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரினால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மக்களை அசிங்கியமானவார்த்தைகளை கொண்டும் கோஷங்களையும் இவர்கள் எழுப்பியுள்ளனர். இதனால் நகரில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
பொலிசார் நகரில் கடமையில் இருந்துள்ள போதிலும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து நகரிலிலுள்ள வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகருக்கு வந்திருந்த பொதுமக்களும் பெரும் அச்சநிலையில் செய்வதறியாது அச்சத்துடன் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அதை தொடர்ந்து அதிகளவிலான இராணுவத்தினர் நகரில் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இருந்தாலும் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம்நகரிலும் அனைத்து வர்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இருந்த வேளையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.