முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கைது செய்யப்படுவாரா? –

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை உடனடியாக கைது செய்ய வேண்டும் அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை மறைத்து வைத்திருந்தார் என குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் டொரின்டன் வீட்டில் ராஜித சேனாரட்ன மறைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில் சந்திரிக்காவை கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சில அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply