முக கவசம் அணியாவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் – டெல்லியில் புதிய கட்டுப்பாடு

46
72 Views

முக கவசம் அணியாவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என  டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவும்  டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இதே போல, தனியார் மருத்துவமனைகளில், ஐசியூ அல்லாத சாதாரண படுக்கைகளில், முன்பு 50 சதவிகிதம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து இருந்ததை, தற்போது 60 சதவிகிதமாக அதிகரிக்குமாறும் டெல்லி அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வடைந்துள்ள அதே வேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,32,62 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here