மாவீரர் வாரம் 3ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

618 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா

உயிரையும் உடலையும்
மண்ணுக்காய் கொடுத்தவர்கள்
உறவையும் மகிழ்வையும்
எமக்காகத் துறந்தவர்கள்
ஊரே உறவாகி நாடே உயிராக
நமக்காக வாழ்ந்தவர்கள்
ஆறடி நிலங்கூட அவர்களுக்கின்றில்லை
மூன்றாம் நாளினில் நினைத்துப் பார்ப்போம்

உயிரைக்கொடுக்க ஆரால் முடியும்
கடவுளின் சாயல் தெரியுதே இவரில்
கடவுளுக்கெல்லாம் கோயில் இருக்க
இவர்களின் உறவுகள் பசியோடு கிடக்க
நேர்த்திக்கடனோடு காணிக்கை சேர்த்து
ஒன்றாய்ச் செய்ய சந்தர்ப்பம் நமக்கு
அருகினில் இருக்கும் அவர்கள் இல்லாத
அவர்களின் வீட்டினில் அடுப்பு எரியுதா?

எட்டிப்பார்ப்போமேஇன்றைக்கென்றாலும்

எம்முயிர் காக்க எமக்காய் வாழ்ந்தவர்
தம்முயிர் கொடுத்து வாழ்க்கை தந்தவர்
இறுதிமூச்சிலும் எம்மை நினைத்துக்
கஞ்சி ஊத்திக் காத்த உயிர்களே
இப்போது இஞ்ச இன்னும் இருக்குது
உயிரைக் கொடுத்து வாழ்க்கை தந்த
உயிர்களை எண்ணி ஊரைப்பார்த்து
உதவிக் கரமாய் மாறுவோம் இன்று

றோய்

Leave a Reply