மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை: ஏற்பாட்டுக் குழு கண்டணம்

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசனிடம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப் பிரிவிர் எட்டு மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் (21.02.2023)  காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரை விசாரணைகளை மேற்கொண்டு, அவரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 8 மணிநேர விசாரணையை மேற்கொண்டமைக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கண்டணம் தெரிவித்துள்ளது.