மலேசிய தடுப்பு முகாம்களில் குழந்தைகள்

மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் குழந்தைகளை அரசு தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என கண்டனம் தெரிவித்திருக்கிறது Lawyers for Liberty எனும் அமைப்பு.
இக்குழந்தைகள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் எனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், அக்குழந்தைகளை குற்றவாளிகளாக நடத்துவது முறை கிடையாது என்றும் அவர்கள் சொந்த விருப்பத்தின் கீழ் நாட்டுக்குள் நுழைந்தவர்கள் இல்லை எனவும் மலேசிய அரசுக்கு அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மலேசிய உள்துறை அமைப்பின் கருத்துப்படி, அந்நாட்டின் குடிவரவுத்தடுப்பு முகாம்களில் 268 பெண் குழந்தைகள் உள்பட 756 குழந்தைகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.