அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன்.
நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்களது வேண்டுகையை என்னால் புறம்தள்ளிவிட முடியவில்லை அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை எழுந்தது.
இரண்டாம் பதிப்பிற்காய் பேருதவிபுரிந்த ஐயா அரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி,சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களுக்கும் இதனை நூலாக்கும் வரை கூடவே பயணித்து வெளியீட்டு நிகழ்வு வரை கொண்டு சென்ற ஆதிக்கும்,
முகம் அறியாமலே வெவ்வேறு வழிகளில் உதவிய அவரது நண்பர்களிற்கும் மற்றும் புத்தகவடிவமைப்பை செய்த பிரசாந் அவர்களிற்கும் புகழ் பிறிண்டர்ஸ்க்கும் அட்டைப்படம் வடிவமைத்த குமரன் அவர்களிற்கும் பொன்னுலகம் பதிப்பகத்திற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
அன்புடன்
மிதயா கானவி