மருத்துவ அறிக்கையில் குளறுபடி – வெறும் தரையில் படுத்துறங்கும் சம்பிக்க எம்.பி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்படும் கைதி, முள்ளந்தண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மெத்தை மற்றும் தலையணையை வழங்குவது வழக்கம்.

கடந்த 19 ஆம் திகதி சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு தலையணை மற்றும் மெத்தையை வழங்க முடியுமா என்ற, மருத்துவ அறிக்கை சிறைச்சாலை அதிகாரிகளிடம், சிறைச்சாலை மருத்துவமனையினால் வழங்கப்பட்டது.

எனினும், சம்பிக்க ரணவக்கவுக்கு முள்ளந்தண்டு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று சிறைச்சாலை மருத்துவர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் வெறும் தரையிலேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply