மன்னாரில் 759 பேர் கொரோனாவால் பாதிப்பு – 5 பேர் இது வரையில் பலி

201 Views

தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.

IMG 20210625 WA0001 மன்னாரில் 759 பேர் கொரோனாவால் பாதிப்பு - 5 பேர் இது வரையில் பலி

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (25) வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் புதிதாக 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இம்மாதம் வரை 252 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது” என்றார்.

Leave a Reply