மனிதர்  வாழ  முடியாத ஒரு பகுதியாக உலகம் மாறும் ஆபத்து – ஐ.நா

63
88 Views

மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ முடியாத இடமாக உலகம் மாறிக்கொண்டுள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பேரழிவு அபாயத்தை குறைப்பதற்கான ஐநா அலுவலகம் தெரிவிக்கையில்,

“கடந்த 20 வருடங்களில் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.  இதற்கு காலநிலை நெருக்கடியே காரணம்.  காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை குறைப்பதற்கு உலகதலைவர்களும் வர்ததக தலைவர்களும் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கதவறியுள்ளனர்.

2000 முதல் 2019ம் ஆண்டுவரை 7348 பாரிய இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றன ,இதன்காரணமாக 1.23மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். 4.2பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2.97 மில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார நஸ்டம் ஏற்பட்டது.

1980 முதல் 2000 ஆண்டுவரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.  ஆசியாவே கடந்த 20 வருடங்களில் இயற்கை அழிவுகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் ஆபிரிக்காவும் அடுத்த இடங்களில் காணப்படுகின்றன.
இயற்கை அனர்த்தங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக சீனா காணப்படுகின்றது. இதற்கு அடுத்ததாக அமெரிக்கா காணப்படுகின்றது.

நாங்கள் நன்கு தெரிந்த பின்னரும் எங்கள் அழிவிற்கான விதைகளை தூவுவது அதிர்ச்சியளிக்கின்றது.”  கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here