மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிய பின்னரே மாகாண சபைத் தேர்தல் – சரத் வீரசேகர

433 Views

புதிய அரசமைப்பு மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே, அந்த யாப்பின் பிரகாரம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply