மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலை

559 Views

கிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.

கடந்த இரண்டு தினங்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை தொடர்கின்றது.

IMG 5931 மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலை

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடும் காற்றுடனான மழை பெய்து வருகின்றது.

மட்டக்களப்பு நாவலடிப்பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் மக்கள் வசிப்பிடம் நோக்கிவரும் நிலையேற்பட்டுள்ளது.

IMG 5928 மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலை

கடல் தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதையும் காணமுடிந்தது.

IMG 5947 மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலை

இன்று புரவி புயல் கிழக்கு மாகாணத்தினை ஊடறுத்துச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோரப்பகுதி மக்களுக்கான அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

Leave a Reply