மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல்!

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் உணவகமொன்றில் இரு குழுக்களுக்கிடையே இன்றிரவு இடம்பெற்ற மோதல் காரணமாக 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கம் மோதலாக மாறியமையே பிரச்சினைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த உடன் மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 1 1 மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல்!