மட்டக்களப்பில் அதிகரிக்கும் சட்டவிரோத மதுபான விற்பனை

365 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும்  மதுபான விற்பனையில் ஈடுபட்ட 15பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

கசிப்பு உற்பத்திக்கான பெருமளவு கோடா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கிரான், கச்சக்கொடி, களுவண்கேணி, வாழைச்சேனை, செட்டிபாளையம் பகுதியில் கசிப்பு விற்பனை,சட்ட விரோத கள் விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

Leave a Reply