பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினருக்கு அழைப்பு -வர்த்தமானி வெளியீடு

375 Views

நாடு முழுவதும் இன்று (22) முதல் பொது ஒழுங்கை பராமரிக்க  முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக dailymirro செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு (அத்தியாயம் 40) மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், ஆகிய மாவட்டங்களில் பொது ஒழுங்கை பராமரிக்க இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அழைக்கப்பட்டுள்ளன.

image 9b8e46f7e0 பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினருக்கு அழைப்பு -வர்த்தமானி வெளியீடு

மேலும் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply