இலங்கை இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது- சுகாதார அமைச்சு

இலங்கை கொரோனா தொற்று காரணமாக மிக ஆபத்தான நிலையில் உள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிமுறை களைப் பின்பற்றாததின் விளைவாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய வகையில் நாடு ஆபத் தான சூழ்நிலையில் இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “கொரோனா குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டன.
மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் தங்களால் வழங்ககூடிய கிசிச்சையின் அளவை கடந்துவிட்டன. கடந்த காலத்தில் 8000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை, பத்து பதினைந்து பேரே தீவிரகிசிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டனர்.  தற்போது 3000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் 35 பேர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.இளவயதினரும் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறியுள்ளது.