418 Views
சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும்“ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு காஷ்மீர்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. எங்களுடைய ஒரே பிரச்சனை காஷ்மீர்தான். இதை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும். நான் ஆட்சிக்கு வந்த பின்னர், உடனடியாக அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, நம்முடைய வேறுபட்ட கருத்துக்களை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க முடியும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினேன். நான் அதில் வெற்றி பெறவில்லை, ஆனால் இறுதியில் உணர்வு மேலோங்கும் என்று நான் நம்புகிறேன். துணைக் கண்டம் வறுமையைச் சமாளிக்க வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதுதான் ஒரே வழி’’ என்றார்.