வவுனியா மாவட்ட உள்ளுராட்சி பெண்கள் ஒன்றியம், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் உரிமை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று(03) வவுனியாவில் இட்பெற்றது.
வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கோரியே இப் பேரணி நிகழ்த்தப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக வவுனியா நகரசபை வளாகத்திற்குச் சென்ற பேரணி, உபநகரபிதா சு.குமாரசுவாமியிடம் மகஜர் கையளித்ததுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரச அதிபர் எம்.கனீபாவிடமும் மகஜர் கையளித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண் சமத்துவம் வழங்கப்பட வேண்டும். அடிக்காதே பெண்ணை அடிக்காதே, வேண்டாம் வன்முறை போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.