பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்; 10 வது இடத்தில் அமெரிக்கா

பாலியல் வன்முறை மற்றும் அடிமை உழைப்பு போன்ற ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் பெண்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளதாக துறைசார் வல்லுனர்களின் புதிய ஆய்வொன்று காட்டுகிறது.

பெண்களின் பிரச்சினைகள் குறித்த 550 நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை தொம்சன் ரொய்ட்டர்ஸ் (The Thomson Reuters Foundation) அறக்கட்டளை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பில் இந்தியா மிகவும் ஆபத்தான நாடாக இருப்பதை அவ்வாய்வின் முடிவறிக்கை காட்டிநிற்கிறது.அத்துடன் வீட்டு வேலைகள், கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம் மற்றும் பாலியல் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கான மனித கடத்தல் போன்றனவும் இந்த ஆபத்துகளில் அடங்கும்.india rape gender violence பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்; 10 வது இடத்தில் அமெரிக்கா

பெண்களை பாதிக்கும் கலாச்சார மரபுகளும் இந்தியாவில் மிக ஆபத்தமானவையாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆய்வில் அமில தாக்குதல்கள், பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றில நான்காவது ஆபத்தான நாடாக இந்தியா இருந்தது.

பட்டியலில் உள்ள 10 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆசியா, மத்திய கிழக்கு அல்லது ஆபிரிக்காவைச் சேர்ந்தவை. 10 வது இடத்தில் சேர்க்கப்பட்ட ஒரே மேற்கத்திய நாடாக அமெரிக்கா இருக்கிறது ,

பெண்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகள்
கணக்கெடுப்பின்படி:

1. இந்தியா
2. ஆப்கானிஸ்தான்
3. சிரியா
4. சோமாலியா
5. சவுதி அரேபியா
6. பாகிஸ்தான்
7. காங்கோ ஜனநாயக குடியரசு
8. ஏமன்
9. நைஜீரியா
10. அமெரிக்கா