புது வருட தினத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்!

புதுவருட தினத்தில் கட்டிட நிர்மான பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக கட்டடத்திலிருந்து விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலங்கம-படபொத வீதிக்கு அருகாமையில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த விழுந்த இளைஞர் அருகிலுள்ள கொஸ்வத்த பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 வயதுடைய மேற்படி இளைஞர் குமன பிரதேசத்தில் வசித்து வந்தவரென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply