கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது-WHO

கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவி  சுமார் ஒரு ஆண்டு கடந்த போதும்  அதன்  வீரியம் குறையவில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறும்போது,  “கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதுவும் கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால்  மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.