பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்த்து யாருக்கு? – மேலும் சில செய்திகள்

246 Views

மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.  

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பிஹார் பாஜக – ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் இன்று தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,

”பிஹார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது. இது முதன்முறையல்ல. 2015-ம் ஆண்டு மகா கூட்டணி அமைக்கப்பட்டபோதும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடித்தது.”  என்றார்.

பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, பிஹார் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையத்தால் பதில் அளிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சீன கப்பலில் சிக்கியிருந்த இந்தோனேசிய தொழிலாளர்கள் மீட்பு

1 71 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்த்து யாருக்கு? – மேலும் சில செய்திகள்Dalian Ocean Fishing எனும் சீன மீன்பிடி நிறுவனத்தின் கப்பலில் செனகல் நாட்டில் சிக்கியிருந்த இந்தோனேசிய தொழிலாளர்களில் 13 பேர் செனகல் நாட்டு இந்தோனேசிய தூதரக ஏற்பாட்டில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இக்கப்பலிலிருந்த 75 இந்தோனேசிய தொழிலாளர்கள் ஏற்கனவே இரண்டு குழுக்களாக இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதமிருந்த 13 தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். இக்கப்பலில் தொழிலாளர்களுக்கும் மீன்பிடி நிறுவனத்துக்கும் பிரச்னை நிலவியதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியா: மகப்பேறு காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும் அகதி பின்னணிக்கொண்ட பெண்கள்

Giving birth as a refugee | openDemocracy

உலகளவில் ஆஸ்திரேலியாவின் பொது சுகாதார அமைப்பு சிறந்த ஒன்றாக இருந்தாலும், 8 சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் மகப்பேறு காலத்தில் ஒரே சுகாதார நிபுணரின் வழிநடத்தலைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் அகதிகளாக உள்ள பெண்கள், வீடற்ற நிலையில் உள்ள பெண்கள், மனநலச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் மகப்பேறு காலத்தில் மக்கள் தொகையின் பிற பிரிவினரை விடக் குறிப்பிடத்தக்க அளவில் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

மலேசிய- தாய்லாந்து எல்லையில் 100க்கும் அதிகமான வெளிநாட்டினர் கைது

2 1 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்த்து யாருக்கு? – மேலும் சில செய்திகள்

மலேசியாவின் Tumpat பகுதியில் உள்ள மலேசிய- தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 100க்கும் அதிகமான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்த எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோத பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற போது கைதாகியுள்ளனர்.

Leave a Reply