பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14பேர் பலியாகினர், 75பேர் காயமடைந்தனர்.
முதல் வெடிகுண்டு இன்று நண்பகல் ஜோலோ தீவில் உள்ள பிளசா நகரில் மளிகைக்கடை முன் வெடித்தது. அந்த நேரம் அங்கு இராணுவத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டாவது குண்டு ஒரு மணி நேரம் கழித்து அதே பகுதியில் “அவ லேடி ஒப் மவுண்ட் கார்மல்“ தேவாலயம் ஒன்றில் வெடித்தது. இது மனித வெடிகுண்டு எனக் கூறப்படுகின்றது.
இந்தக் குண்டு வெடிப்புகளில் 14பேர் கொல்லப்பட்டும், 75பேர் காயப்பட்டும் உள்ளனர். இவர்களில் 7 இராணுவத்தினரும், ஒரு பொலிஸ்காரரும், 6 பொது மக்களும் பலியாகியுள்ளனர். இந்த இரு இடங்களும் அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களாகும். 21 இராணுவ வீரர்கள், 6 அதிகாரிகள், 48 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
தேவாலயக் குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஹஸான் சவாஜ்தான் பொறுப்பேற்றுள்ளார். இரண்டாவது குண்டுவெடிப்பிற்கும் இவரே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.