பிரித்தானியா மகாராணி காலமானார்

பிரித்தானியா மகாராணியான இரண்டாவது எலிசபத் (96) கடந்த வியாழக்கிழமை (8) ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் காலமானதாக பக்கிங்கம் அரன்மனை தெரிவித்துள்ளது.

1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபத் 1952 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூடியிருந்தார். அதன் பின்னர் அவர் 70 வருடங்கள் மகாரணியாக பணியாற்றியிருந்தார்.

மகாரணியின் மரணத்தை தொடர்ந்து அவரின் மகனான வேல்ஸ் நாட்டு இளவரசர் சார்ள்ஸ் அரசராக பதவியேற்கவுள்ளார். அவர் 14 பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் இருப்பார்.

ஸ்கொட்லாந்தில் இருந்து அவரின் உடல் வெள்ளிக்கிழமை (9) லண்டனுக்கு கொண்டுவரப்படும் என பக்கிங்கம் அரன்மனை தெரிவித்துள்ளது.