தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டது- பேர்ள் அமைப்பு

தமிழர்களுக்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பேர்ள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (பேர்ள்) தனது புதிய அறிக்கையில் இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் எவ்வாறு தண்டிக்க தவறிவிட்டது என்பதை அராய்ந்துள்ளது.

இந்நிலையில், “விசாரணைகள் இல்லை இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு இன்னல்கள் மட்டுமே“ என்ற தனது அறிக்கையில் பேர்ள் அமைப்பு கூறியுள்ளதோடு பாலியில் வன்முறை உட்பட ஏனைய சர்வதேச குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நம்பகத் தன்மை மிக்க ஆதாரங்கள் உள்ள போதிலும் குற்றவாளிகளிற்கு எதிராக இலங்கை சட்ட நடடிவக்கைகளை எடுக்கவில்லை என மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.