பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு சென்று மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார்.

உடனே பாதுகாப்பு அதிகாரிகளால்  குறித்த நபர்  கைது செய்யப்படுகின்றனர்.மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, குறித்த நபர் “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply