பிரான்ஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை

பிரான்ஸில் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் Noisy – le- Sec எனும் இடத்தில் குடும்பத் தகராறு காரணமாக இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்படனர்.மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாகுதலை மேற்கொண்ட நபரும் படு காயமடைந்துள்ளமையாகவும் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என Le Parisen பத்திரிகை தெரிவித்துள்ளது. பதினாக்கு வயதிற்குற்பட்ட நான்கு பிள்ளைகளும், மற்றும் ஒருவர் கொல்லபட்ட நிலையில் மற்றும் ஒரு சிறுவன் இரத்த காயங்களுடன் ஒடிச்சென்று அருகில் இருந்த அருந்தகம் (BAR) ஒன்றில் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்ததாக அறியமுடிகிறது.

கத்தியினாலும், சுத்தியலாலும் தாக்கியே இக் கொலைகள் செய்யப்பட்டுள்ளது. கொலையினை செய்தவர் மாமா முறையானவர் என நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. rue Emmaanvel Aragoஎனும் முகவரியில் தான் இத் துயரங்கள் நடைபெற்றுள்ளது.