பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி நியமனம்

நேற்றைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னரும் மகிந்த ராஜபக்ஸவின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தவராவார். அத்துடன் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபா பணமோசடி தொடர்பான வழக்கில் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply