பாகிஸ்தான் தொடருந்துகள் விபத்து – உயிரிப்பு 33ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் இரு தொடருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் மற்றும் மில்லட் ஆகிய தொடருந்துகள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

000 9BJ7GY 1 பாகிஸ்தான் தொடருந்துகள் விபத்து – உயிரிப்பு 33ஆக அதிகரிப்பு

இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதோடு 120க்கும் மேற்பட்டோர்   காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து    தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் பிரதமர் இம்ரான் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் பல  தொடருந்து விபத்துகள் பாகிஸ்தானில் நடந்திருக்கின்றன. 2019-ஆம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட தொடருந்து தீ விபத்தில் 74 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply