பாகிஸ்தான் செல்லும் வவுனியா வீரர்கள் 7 பேருக்கும் கௌரவிப்பு

529 Views

வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவில் இருந்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை பாக்கிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.

பாக்கிஸ்தான் லாகூரில் எதிர்வரும் 23-01-2020 தொடக்கம் 27-01-2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்.கே.கெவின், பி.ராகுல், எஸ்.சிறிதர்சன் மற்றும் கெ.நிரோஜன் ஆகிய வீரர்களை வெற்றிபெற வாழ்த்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார், வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் ஜெகன், வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர். இ.நவரட்ணம் மற்றும் நகரசபை ஊழியர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.

Leave a Reply