பயணத் தடைக்கு மத்தியிலும் தீவிர வைரஸ் பரவல் – 2,637 பேருக்கு நேற்று கொரோனா

நாட்டில் நேற்று 2 ஆயிரத்து 637 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 10 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 259 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply