பயணத்தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு? தொற்று அதிகரிப்பதால் நெருக்கடி

364 Views

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயணத்தடை நீடிக்கப்படவேண்டுமென சுகாதாரத் தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிந்தது.

முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமென அரசு அறிவித்திருந்தது.ஆனால் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையாமல் ஆபத்தான நிலைமை தொடர்வதால் பயணக்கட்டுப்பாட்டை இவ்வாறு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில் மக்கள் பொறுப்பற்று நடந்துகொள்வதால் நாளை முதல் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை கடுமையாக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply