பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம்-அமைச்சர் அலி சப்ரி

289 Views

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அராப் செய்தி நிறுவனத்திற்கு (Arab News) அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில்,

முன்னைய அரசாங்கம் இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த – ஆனால் நிறைவேற்றாத – 1979 ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம், நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும் சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதுகாப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாதகாலம் வரையில் நபர் ஒருவரை தடுத்துவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றங்களிற்கு உட்படுத்தப்படும் அல்லது கைவிடப்படும்.  அமைச்சரவை நியமித்துள்ள இரு குழுக்களின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே இது குறித்து தீர்மானிக்கப்படும்.

முதலாவது அமைச்சரவை குழு இரண்டாவது நிபுணர்கள் குழு என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் அவர்களிற்கு மூன்று மாதங்களை வழங்குவோம். அவர்கள் மூன்று மாதங்களிற்குள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவேண்டும்.

மார்ச் மாதம் செய்யப்பட்ட திருத்தங்கள் மத இன சமூக ஐக்கியமின்மையை ஏற்படுத்தியவர் அல்லது ஏற்படுத்த முயன்றார் என சந்தேகிக்கப்படுபவரை அவர் சரணடைந்தால் அல்லது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் இரண்டுவருடங்கள் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்துவைப்பதற்கு அனுமதியளித்தன.

ஜூன் 8 ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியது அந்த தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகள் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீறுவதால் அதனை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

இலங்கையை பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வேண்டுகோள் விடுத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இரத்துச்  செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தது.

செவ்வாய்கிழமை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பற்ற விதத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

இணைய குற்றங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகியவை அதிகளவில் இடம்பெறுவதால் காலத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

மனித உரிமைகளை பேணவேண்டிய அதிகளவு அவசியம் உள்ளது.  உள்ளுர் நலன்கள் சர்வதேதேவைகளிற்கு ஏற்ப மனித உரிமை தேவைகளை நிறைவேற்றுவதற்கான சமநிலைiயான நடவடிக்கையை முன்னெடுக்க முயல்கின்றது” என்றார்.

Leave a Reply