பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பு!

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் நாளை மறுதினம் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்திருந்தமை பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பாக அந்த நினைவு தினத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply