நேற்றும் 26 கடற் படையினருக்கு கொரோனா தொற்றியது

549 Views

சிறிலங்காவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 26 பேர் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்திருப்பதாக இன்று அதிகாலை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது.

நேற்று கண்டறியப்பட்ட 26 பேரும் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை 454 ஆக அதிகரித்திருக்கின்றது.

Leave a Reply