நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது..
தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டதரணிகள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாளை காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை (உண்ணாப்பிலவு வைத்தியசாலை) முன்பாக ஒன்று திரண்டு, பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.