நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான அக்சய்குமார் சிங், தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

கடந்த 2012ல் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் அக்சய் குமார் சிங் என்பவர், தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

குற்றவாளிகளான மற்ற 3 பேரின் சீராய்வு மனுக்கள் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகள் அனைவரின் கருணை மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் ஏற்கனவே தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.