நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுவென்சா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுவென்சா தொற்று வேகமாக பரவும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்புளூயன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் காலநிலை பாதிப்பிற்குள்ளான மக்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக கர்ப்பிணி தாய்மார்கள், இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டோர் உட்பட பல நாள்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், தடுமல் போன்ற குணக்குறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது