நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா?- ஜிம்பிரவுண் நகர் மக்கள் கேள்வி

15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழ்கின்றோம் நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா என மன்னார் ஜிம்பிரவுண் நகர்   மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜிம்பிரவுண் நகர் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல்  இருக்கின்றது. இளம் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த குடிசை வீட்டில் வசிப்பது பாரிய பிரச்சினையாக இருப்பதாக  பெற்றோர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கும் பொழுது,

நாங்கள் மன்னார் ஜிம்பிரவுண் நகரில் வாசிக்கின்றோம் இந்த இடத்திற்கு நாங்கள் வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றன  இந்த பதினைந்து வருடங்களாக  இதே குடிசை வீட்டில் தான்  வசிக்கின்றோம்.

IMG 20210612 103425 நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா?- ஜிம்பிரவுண் நகர் மக்கள் கேள்வி

கடந்த ஆட்சியில் எமக்கு வீட்டுத்திட்டம் தந்தார்கள் அந்த வீட்டு திட்டம் முழுமை அடையாமல் இருக்கின்றது.  நாாங்கள் கடனாளிகளாகி தெருவில்  நிற்கின்றோம்.

பாடசாலை செல்லும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவ்வாறான நிலையில் வீடு கட்டுவது என்பது  உண்மையில் முடியாத காரியம். ஓலைக்குடிசையில் வாழும் நாங்கள் சாகும் வரை ஓலைக் குடிசையில் தான் வாழவேண்டுமா?

மேலும் இந்த கொரோனா காலத்தில்  தனிமை படுத்துங்கள் என்று கூறுகின்றார்கள் இந்த சிறிய ஓலைக் குடிசையில் எவ்வாறு நாங்கள் தனிமைப்படுத்தி சமூக இடைவெளியை பேணுவது.

இந்தக் கொரோனா காலத்திலும்  எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை செய்துவிட்டோம். பதில் தருவதாக காலத்தை கடத்துகிறார்களே தவிர அதற்கான முழுமையான தீர்வுகளை எமக்குத் தரவில்லை.

FB IMG 1623482472244 நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா?- ஜிம்பிரவுண் நகர் மக்கள் கேள்வி

எனவே மன்னார் மாவட்ட செயலாளர் அவர்கள் நேரில் வந்து  பார்வையிட்டு அதற்கான தீர்வை தரவேண்டும் என்று நாங்கள்  கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் மாந்தை மேற்கு நானாட்டான்  முசலி  போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 2,900 வீடுகள் முழுமைப்படுத்த படாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது