தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

a1 1 தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் - வேல்ஸில் இருந்து அருஸ்டந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும்.

இந்த விபத்தில் ஈரானின் அதிபர் இப்ராகீம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் குசேன் அமீர், ஈரானின் ஆன்மீகனத் தலைவர் அயத்தெல்லா கொசானியின் பிராத்தியோக பிரதிநிதி, ஈரான் அதிபரின் பாதுகாப்பு பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் தர அதிகாரி, இரண்டு கேணல் தர விமானிகள், தொழில்நுட்பவியலாளர் மற்றும் கிழக்கு ஆஜாபைஜானின் ஆளுநர் ஆகியோர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஆஜாபைஜானில் ஈரானின் உதவியுடன் அமைக்கப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களை திறந்துவைப்பதற்காக சென்ற அவர் அங்கு அந்த நாட்டின் தலைவரை சந்தித்ததுடன், இரு தலைவர்களும் திறப்புவிழாவில் பங்குபற்றியிருந்தனர். அதன் பின்னர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை ரப்ரிஸ் அனைத்துலக விமானநிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தி மூலம் 100 கி.மீ தொலையில் உள்ள எண்ணைசுத்திகரிப்பு நிலையத்தின் விழாவில் கலந்துகொள்வதற்கான சென்றிருந்தார்.

a2 1 தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் - வேல்ஸில் இருந்து அருஸ்அதில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் அதே பாதையால் திரும்பியபோது அவர் பயணித்த உலங்குவானூர்தி ரடார் திரையில் இருந்து மறைந்துள்ளது. அதன் பின்னர் 12 மணிநேர தேடுதலின் பின்னர் துருக்கியின் அகின்சி வகை ஆளில்லாத உளவு விமானம் தீப்பிடித்த உலங்குவானூர்தியின் வெப்பத்தின் கண்டறிந்து உலங்குவானுர்தி வீழ்ந்த இடத்தை கண்டுபிடித்திருந்தது.

இந்த நடவடிக்கையில் ஈரனின் 7 ஆளில்லாத விமானங்களும் பங்குபற்றியிருந்தன. ரஸ்யாவும் தனது பி.ஓ-105 வகை இரட்டை இயந்திர தேடுதல் சிறப்பு உலங்குவானுர்தியையும் ஐ.எல்-76 ரக விமானத்துடன் 60 சிறப்பு தேடுதல் படையினரையும் அனுப்பியிருந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட உலங்குவானூர்தி முற்றாக எரிந்துள்ளதுடன் சடலங்களும் அடையாளம் காணமுடியாதவாறு உள்ளன. ஈரானின் ஆன்மீகத் தலைவரான அயத்தெல்லா கொசானிக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர் ரைசி கொல்லப்பட்டது மிகப்பெரும் இழப்பாகும்.

அயத்தெல்லா கொசானனி 1989 ஆம் ஆண்டில் இருந்து தலைராக உள்ளார். ஆனால் தற்போது ரைசியின் மரணத்தில் மொசாட்டின் பங்களிப்பு உள்ளதா என்ற கேள்விகள் பல மட்டங்களிலும் எழுந்துள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக ஈரானுக்கு உள்ளும் வெளியிரும் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் படைத்துறை தளபதிகளை இஸ்ரேலின் மொசாட்டும் அமெரிக்காவின் சி.i.ஏயும் இணைந்து படுகொலை செய்திருந்தன.

A3 தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் - வேல்ஸில் இருந்து அருஸ்கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட மிகப்பெரும் ஏவுகைணத் தாக்குதலின் பின்னர் அதன் அரச தலைவர் கொல்லப்பட்டுள்ளார். அதாவது பூகோள அரசியல் போர் உச்சம்பெற்றுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. அண்மைக்காலங்களில் ஈரான் மிக முக்கிய இரண்டு பேரை இழந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜெனரல் சொலாமனி சி.ஐ.ஏயின் உளவு விமானம் மூலம் கொல்லப்பட்டிருந்தார். அதற்கு பதிலடியாக அமெரிக்கத் தளத்தை ஈரான் தாக்கியழித்திருந்தது. அரசியலில் இல்லாதபோதும் ஈரானில் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக சொலமனி கருதப்பட்டிருந்தார்.

அவரைப் போலவே ரைசியும் மிகவும் முக்கியமான தலைவராவார். தற்போதைய ஆன்மீகத் தலைவருக்கு 85 வயதாவதால் அவரின் இடத்தை நிரம்பும் தகுதி ரைசிக்கு உண்டு என கருதப்பட்டது. எனவே அவரின் இழப்பு மிகப்பெரும் இழப்பாகும். ஈரானின் மிக மூத்த படைத்தளபதியான ஜெனரல் சாயிட் மொசாவி கடந்த வருடம் டிசம்பர் மாதம் லெபனானில் வைத்து கொல்லப்பட்டிருந்தார். ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியான மொளசீன் மஹாவடி 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டிருந்தார்.

அதாவது ஈரானின் முக்கிய தலைவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். ரைசியின் உலங்குவானூர்தி புறப்பட்டதும் அமெரிக்காவின் சி-130 ரக விமானம் திடீரென ஆஜாபர்ஜானில் வந்து இறங்கியது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அதாவது இந்த விமானத்தில் இருந்து இலத்திரனியல் சாதனங்கள் மூலம் உலங்குவானூர்தியின் கட்டுப்பாட்டை குழப்பியிருக்கலாம் அல்லது நிறுத்தியிருக்கலாம் என கருதப்படுகின்றது. 1970 களில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பெல்-212 விமானத்தில் தான் ரைசி பயணித்துள்ளார். அந்த விமானத்தின் இலத்திரனியல் இயங்குமுறை அமெரிக்காவுக்கு பரீட்சையமானது.

a4 தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் - வேல்ஸில் இருந்து அருஸ்கடந்த வருடம் ஈரானுக்கு ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் வந்தபோது அவரின் விமானத்திற்கு பாதுகாப்பாக வந்த 4 எஸ்.யூ-35 ரக விமானங்கள் மத்தியதரைக் கடலில் நின்ற அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலின் இலத்திரனியல் சாதனங்களை குழப்பியதுடன், பூட்டினின் விமானத்திற்கு பாதுகாப்பையும் வழங்கியிருந்தன. அதாவது மத்தியகிழக்கில் அமெரிக்கா இலத்திரனியல் போர் முறைகளை கையாண்டுவருவதாக ரஸ்யாவின் புலனாய்வுத்துறை சந்தேகித்திருந்தது.

மேலும் உக்ரைன் போரில் ரஸ்யாவின் கை ஓங்குவதும், காசா போரில் ஹமாஸை முறியடிக்க முயாமல் உள்ளதும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலினால் பலமான பதிலடியை கொடுக்க முடியாது போனதும் மேற்குலகம் நேரிடையான போரை தவிர்த்து தனது புலனாய்லுத்துறை மூலம் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதற்கு அண்மையில் இடம்பெற்ற பல சம்பவங்கள் ஆதாரமாகவும் உள்ளன. கடந்த 7 ஆம் நாள் சவுதிஅரேபியாவின் இளவரசரை குறிவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் 14 ஆம் நாள் துருக்கியில் ஒரு இராணுவப்புட்சி மேற்கொள்ளபட்டிருந்தது. ஆனால் அது முறியடிக்கபட்டிருந்தது. பின்னர் கடந்த 15 ஆம் நாள் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் சுடப்பட்டார், தற்போது 19 ஆம் நாள் ரைசி கொல்லப்பட்டுள்ளார்.

அதாவது மேற்குலகம் மற்றும் தெற்கு மண்டல நாடுகளுக்கு இடையிலான தற்போதைய சமரில் தெற்கு மண்டல நாடுகளின் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது இந்த நடைமுறையை தெற்கு மண்டல நாடுகளும் பின்பற்றினால் உலகம் மூன்றாவது உலகப்போரை நோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது யதார்த்தம்.