தேர்தலில் தோல்வியடைந்தால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லமாட்டேன்: சுமந்திரன்

தேர்தலில் தோல்வியடைந்தால், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழையமாட்டேன் என்று, தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.பொதுத் தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என, எம்.ஏ.சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே, அவ்வாறு செல்லமாட்டேன் என்றும், அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றைப் பதிவு செய்வேன் எனவும் பதிலளித்துள்ளார்.

Leave a Reply