தேடப்பட்ட ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி; பொலிஸ் சுற்றிவளைப்பு

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன நேற்று மாலை கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜிதவைக் கைது செய்வற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரைத் தேடி அவரது கொழும்பு உத்தியோக பூர்வ இல்லத்துக்கு நேற்றும் நேற்று முன்தினமும் சென்றுள்ளனர். அங்கு அவர் இருக்கவில்லை.

மேலும், அவரது சொந்த வீடான களுத்துறை, பேருவளையில் உள்ள வீட்டுக்கு சென்ற போது அங்கு அவர் தற்சமயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர் நேற்று மாலை திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நேற்றிரவு மருத்துவமனை விஷேட அதிரடிப்படையால் சுற்றிவளைக்கப்பட்டது.

Leave a Reply