தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான  அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் 93ஆவது வயதில் கடந்த 09ஆம் திகதி தனது இல்லத்தில் காலமானார்.

தேசியத் தலைவரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தி மலரில் தனது கருத்துக்களை பதிந்திருந்தார்.

1967 முதல் 1969 வரை அமெரிக்காவின் சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார்.

மேலும் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் முன்னணி ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.

 

96d29739 fae6 4812 9647 b905fdda6438 தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்

ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பிற்கு நீதி கோரியும், சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், நாடுகடந்த அரசாங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மில்லியன் கையெழுத்து வேட்டை என்ற போராட்டத்தில் முதலில் கையொப்பமிட்டிருந்தார்.

அன்னாரின் பிரிவிற்கு இலக்கு ஊடகம் தனது அஞ்சலிகளை தெரிவிக்கின்றது.