தென் கியூபா பகுதியில் பூமி அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

682 Views

மிகவும் சக்தி வாய்ந்த 7.7 புள்ளி அளவுடைய பூமி அதிர்வு இன்று கியூபாவின் தென் பகுதியில் ஏற்பட்டதால் கியூபா மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்காலம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூபா மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளுக்கு அண்மையாக உள்ள கடற்பகுதியில் பூமி அதிர்வு ஏற்பட்டதால், உடனடியாக தேசங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படலாம் என அமெரிக்காவின் புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூமி அதிர்வு இடம்பெற்ற இடத்தில் இருந்து 300 கி.மீ தூரம் வரை உள்ள கரையோரப் பிரதேசங்களை ஆழிப்பேரலை தாக்கலாம் என அனைத்துலக ஆழிப்பேரலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply