திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் : குஷ்பு  கைது –மேலும் சில முக்கிய செய்திகள்

561 Views

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.

பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் தொல். திருமாவளவன்.

மேலும் ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட தகவலில், மனு ஸ்மிருதி நூலை தடை செய்ய வலியுறுத்துவதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார்.

மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர் பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்” என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,”திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே” என மனு ஸ்மிரிதி விவகாரத்தில் தொல். திருமாவளவன் எம்.பிக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். அதே போல் மேலும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முடக்கல்நிலை அவசியமில்லை- அமைச்சரவை தீர்மானம்

கொரோனா வைரஸ் : இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அதிகரித்த பாதிப்பு - காரணம் என்ன? - BBC News தமிழ்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ள அமைச்சரவை, சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து அமைச்சரவை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி இது குறித்து அமைச்சர்களிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் கடந்த முறையை விட இம்முறை வைரஸ் வேகமாக பரவுகின்றது என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகவே சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் மக்கள் வாழ்வதே சிறந்த தீர்வு என்றும் அமைச்சரவை  தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாயர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது இதுவரையில் 7000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவில் 10 வெளிநாட்டினர் கைது

Arrest, Custod|கைது, கையடைவு மற்றும் காவல் வைப்புக் கட்டளை - ஒரு அறிமுகம்!(Arrest, Custody, Remand)- Dinamani

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேசுகையில், “நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களுக்கு எதிராக மலேசிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும். எல்லைகளில் குறிப்பாக சட்டவிரோத பாதைகளில் மலேசிய அமலாக்க முகமைகள் தொடர்ந்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்,” எனத் தெரிவித்துள்ளார் மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.

இந்தியாவில் 80 இலட்சத்தை நெருக்கும் கொரோனா பாதிப்பு

1 93 திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் : குஷ்பு  கைது –மேலும் சில முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 72,01,070 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,25,857 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,19,502 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் மொத்தமாக இதுவரை 10,44,20,894 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 9,58,116 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலவில் அதிகளவு நீர்’ – நாசாவின் புதிய தகவல்.!

கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்' - நாசாவின் புதிய தகவல்.! | NASAs SOFIA Discovers Water On Sunlit Surface Of Moon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

ஏற்கெனவே கணிக்கப்பட்டதை விட  நிலவில் அதிகளவு நீர் இருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் நீரை காணலாம் மற்றும் எரிபொருளைக் கூட கண்டறியலாம் என சொல்லப்படுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக நம்பப்பட்டது, ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள்  நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளின்படி சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. இதில் சந்திர துருவப் பகுதிகளில் நிரந்தரமாக நிழலாடிய குளிர்பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட சந்திரன் மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும்  ஆதாரம் கிடைத்துள்ளது

மேலும் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதைக் கண்டால், அதை மனித ஆய்வுக்கான வளமாகப் பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படலாம் என்று விஞ்ஞானி ஹொன்னிபால் கூறியுள்ளார்.

சந்திரனின் துருவப் பகுதிகளைப் ஆராய்ந்த மற்றொரு ஆய்வில், அங்கு சூரிய ஒளி ஒருபோதும் காணாத சந்திர பள்ளங்களில் நீர் பனி சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் நாசா சந்திரனின் தெற்கு துருவத்திற்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தில் நீர் படிகங்களைக் கண்டறிந்தது. ஆனால் புதிய ஆய்வில் பில்லியன் கணக்கான மைக்ரோ கிராட்டர்களின் சான்றுகள் கிடைத்தன, அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய அளவிலான நீர் பனியைத் சேகரித்து வைத்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply