திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: திமுக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது.   இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், “ திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். கலைஞர் பெயரில் உணவகம் அமைக்கப்படும்.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும். லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்” என்றார்.