547 Views
திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழர்களின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று உறவினர்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.
1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உட்பட 24பேர் சிறீலங்கா அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயிலொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.