தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம்;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்-பிரித்தானிய தொழிலாளர் கட்சி

‘Labour party recognises the mistakes made by the British during the colonial times , Recognise the Tamil people’s right to self-determination in Sri Lanka and call for a political solution in Sri Lanka that recognises Eelam Tamil people as a nation on the island with the right to self-determination.’

காலனித்துவ காலங்களில் ஆங்கிலேயர்கள் செய்த தவறுகளை தொழிலாளர் கட்சி ஏற்றுக்கொள்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. மூலம் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க தொழிலாளர் கட்சி சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும் என பிரித்தானியாவின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் கட்சி இலக்கு இணையம் மற்றும் வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து சில கேள்விகளை முன்வைத்திருந்தோம். அதற்கு தொழிளாளர் கட்சியிடம் இருந்து பதில்கள் கிடைத்துள்ளது.

பதில்கள் காலம் தாழ்ந்து வந்தாலும் அதனை நாம் முக்கியத்துவம் கருதி இங்கு பிரசுரிக்கின்றோம். ஏனைய கட்சிகளின் பதில்கள் கிடைத்ததும் அவற்றை பிரசுரிப்போம்.labour1 தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம்;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்-பிரித்தானிய தொழிலாளர் கட்சி

நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி எமது குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஈழத்தில் நடைபெற்ற 2009 ம் ஆண்டு இனஅழிப்பு நோக்கிலான (Genocidal War) போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற மக்களாக (Vulnerable people) கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுடைய மீள்வாழ்வு,மீளமைப்பு தொடர்பாக உங்கள் கட்சிகளின் கொள்கைகள் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன இருக்கின்றன இருக்கும்?

பதில்– தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான நிதியை சர்வதேச மேம்பாட்டுத்துறை மூலம் அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க நிலையான தொழில்கள் மற்றும் வணிகங்களை உருவாக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம். நம்பிக்கையையும் சிறந்த எதிர்காலத்தையும் வளர்ப்பதற்கு பிரித்தானியா தமிழர்களின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் கல்வித் திட்டங்களை அமைப்பதிலும் கவனம் செலுத்துவோம்.tamil protest தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம்;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்-பிரித்தானிய தொழிலாளர் கட்சி

கேள்வி சர்வதேச முறைமைகளையும் ஒழுங்குகளையும் காணாமல் ஆக்கப்பட்டடோர் குறித்த தகவல்களை வெளியிடுதல், போர்க்குற்ற விசாரணைகள், மனிதாயத்திற்கு எதிரான விசாரணைகள் மனித உரிமை வன்முறைகள் தொடர்பான விசாரணைகளில் பின்பற்றுமாறு அமெரிக்கா,இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அனுசரணையுடன் 2015இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய 30/01 தீர்மானத்தைக் தாங்கள் பின்பற்ற முடியாது எனவும் புதிய தீர்மானமொன்றைத் தாங்கள் 2020இல் முன்மொழியப் போவதாகவும் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அறிவித்துள்ள நிலையில் அவர்களின் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி 30/1 தீர்மானத்தை முன்னெடுக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுவீர்கள்?

பதில்-பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. மூலம் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க தொழிலாளர் கட்சி சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும்.

 கேள்விஆய்வாளர் மத்தியூ கொட்வின் ஐக்கிய இராச்சியத்திலும் கனடாவிலும் தமிழர்கள் வெளிவிவகார அலுவல்களில் ஒரு சக்தியாக உள்ளனர் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.நீங்களும் தமிழர்கள் உங்கள் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு தந்து வருகின்றார்கள் என்பதை நன்கு அறிவீர்கள். எனவே நாங்கள் காலனித்துவ ஆட்சி தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் வன்னி என்கிற முழு அளவிலான இறைமையுள்ள அரசுக்களை இலங்கையில் கொண்டிருந்த ஈழத்தமிழர்களைப் பொறுத்த உங்கள் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கை என்னவென உங்களிடம் அறிய விரும்புகின்றோம்?

பதில் – இங்கிலாந்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அளித்த பங்களிப்புகளை தொழிற்கட்சி எப்போதும் அங்கீகரித்து வருகிறது, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்போதும் தொழிற்கட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தொழிலாளர் கட்சி எப்போதும் அங்கீகரித்துள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தொழிலாளர் கட்சி அங்கீகரிக்கும். இலங்கையில் உள்ள இன மோதலுக்கு அரசியல் தீர்வு காண தொழிலாளர் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.

 கேள்விபிரித்தானியாவால்தான், பிரித்தானியா காலனித்துவ ஆட்சியில், தமிழர்களினதும் சிங்களவர்களினதும் இறைமையுள்ள அரசுக்களை ஒரு அரசாக இணைத்தமையால் தமிழர்கள் சிறுபான்மையினராகி அன்று முதல் இன்று வரை பௌத்த சிங்களப் பெரும்பான்மைப் பேரினவாத இனஅழிப்பு ஆட்சியை ஒற்றையாட்சிப் பாராளமன்ற ஆட்சிமுறைமைக் கூடாக சட்டத்தின் ஆட்சியோ சமத்துவமோ இன்றி அனுபவித்து வருகின்றனர்.எனவே நாங்கள் உங்களை தமிழர் பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல் அனைத்துலகப் பிரச்சினையாகப் பார்த்துத் தமிழர்கள் இந்த அடக்குமுறையில் இருந்து மீண்டெழ உதவுமாறு பணிவன்பாக வேண்டுகிறோம். நீங்கள் தமிழர்களின் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினையாகப் பார்ப்பீர்களா?three sovereign regions in the island of ceylon colombotelegraph தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம்;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்-பிரித்தானிய தொழிலாளர் கட்சி

பதில்காலனித்துவ காலங்களில் ஆங்கிலேயர்கள் செய்த தவறுகளை தொழிலாளர் கட்சி ஏற்றுக்கொள்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் அறிக்கையில் மற்றும் ஜான் மெக்டோனல் எம்.பி., நிழல் அதிபர் தனது நவம்பர் 21, 2019 நாள் வீடியோ செய்தியில் கூறியது போல், இலங்கையில் இன மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண தொழிலாளர் கட்சி பணியாற்றும், அது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சுய உரிமையை அங்கீகரிக்கிறது.