தமிழ்க் கடல்

தமிழ் ,ஓர் இயன்மொழி. அதாவது வேறு எம்மொழிகளின் துணையின்றித் தானே தனித்துத் தோன்றி வளர்ந்த மூலமொழி.இம் மொழியே உலக மொழிகளைத் தோற்றிய தாய்மொழி.முனைவர் கு. அரசேந்திரன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கால்டுவெல், ஞானப்பிரகாசர்,பாவாணர் அடிச்சுவட்டில் தமிழ்-இந்தோ ஐரோப்பிய மொழி உறவினை ஆய்ந்து நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கடந்த சூலை மாதம் தொடங்கி இலண்டனிலிருந்து இயக்கும் இணையவழி இது பற்றித் தொடர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தாய்- தமிழ்த் தாய் என்னும் அமைப்பு இந் நிகழ்வினைப் பொறுப்பெடுத்து நடத்துகிறது.மாதம் ஓர் சொற்பொழிவாய்த் தொடர்வதென்ற திட்டத்தில் மூன்றாவது சொற்பொழிவும் நடந்து விட்டது.முனைவர் கு.அரசேந்திரனின் ஆய்வுச் சாரமாக இப் பொழிவுகள் அமைந்துள்ளன. உலகத் தமிழர்கள் தமிழின் உண்மையான ஆழ அகலத்தை இப் பொழிவுகளில் காணலாம்.இந்தோ ஐரோப்பிய உலகமும் இப் பொழிவுகளைக் கேட்டால் வியப்படையும்; உண்மையை உணரும்.இலக்கு இணையவழி இப் பொழிவுகளை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கின்றோம்.