தமிழர் தாயகப் பகுதியில் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடு

நாளைய மாவீரர் தின நிகழ்விற்கான ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று(25) காலை சிரமதானப் பணிகள் நடைபெற்றன. துயிலுமில்ல பணிக்குழு செயலாளர் சுப்பிரமணியம் பரமானந்தம் தெரிவிக்கும் போது,

இதுவரை மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் எதுவித தடையும் விதிக்கப்படவில்லை. எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும் இம்முறையும் வழமை போல் மாவீரர் நிகழ்வை நடத்தியே தீருவோம் என கூறினார்.

முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் இன்று காலை மஞ்சள் சிவப்பு நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் மாவீரர் குடும்பங்கள், அவர்களின் உறவினர்கள், மற்றும் கட்சி பேதமின்றி அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.